Templates by BIGtheme NET
audi-car

ஆடி கார் விலை ரூ.9 லட்சம் வரை உயரும்

வரி விதிப்பின் விளைவாக கார்கள் விலையை ரூ.9 லட்சம் வரை உயர்த்த உள்ளதாக ஆடி இந்தியா நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ரகீல் அன்சாரி கூறியது: 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றின் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியும் 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர சமூக நல திட்டங்களுக்காக கூடுதல் வரி விதிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரி விதிப்பு அதிகரிப்பால் நிறுவனத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை வாடிக்கையாளர்களிடம் ஓரளவு பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது.
தற்போது நிறுவனம் எஸ்யுவி கியூ3 (விலை ரூ.35.35 லட்சம்) மாடல் தொடங்கி ஸ்போர்ட்ஸ் காரான ஆர்8 (விலை ரூ.2.63 கோடி) மாடல் வரை இந்திய சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ.1 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உயர்த்தப்படவுள்ளது. இது வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றார் அவர்.
#audicar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

apteka mujchine for man ukonkemerovo woditely driver.