நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் அருகே பறக்கன் கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் அருகே பறக்கன்கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி அதிகாரிகள் தலைமையில் நடந்தது. வருவாய் துறையால் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. 16 வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சில வீடுகளை காலி செய்ய மறுத்து வீட்டுக்குள் இருந்தவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பணியில் பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.