பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » உலகச்செய்திகள் » அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை உறுதி செய்த பிரான்ஸ், ஸ்வீடன்: ஜெர்மனி
578747

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை உறுதி செய்த பிரான்ஸ், ஸ்வீடன்: ஜெர்மனி

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் அரசுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து ஜெர்மனி அரசு வெளியிட்ட அறிக்கையில், “பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் உள்ள சோதனை நிலையங்களில் செய்யப்பட்ட ஆய்வில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், நாங்கள் சில முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. மேலும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு புதின் விஷம் வைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஜெர்மனி தெரிவித்தது.

மேலும், அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது. இந்த நிலையில் அலெக்ஸி நவால்னியிடம் விசாரணை நடத்த ரஷ்யா முயன்று வருகிறது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.