அருமனை சந்திப்பைெயாட்டி முக்கிய வணிக நிறுவனங்கள் இருப்பதாலும், வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், வியாபாரிகள் பொருட்களை சாலைக்கு மிக நெருக்கமாக வைப்பதால் நடைபாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வியாபாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் நேற்று மாலையில் அதிகாரிகள் அதிரடியாக சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வியாபாரிகளை சமாதானம் ெசய்தனர். இதை தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அருமனையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்; வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3
Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65