Home » தமிழகச் செய்திகள் » அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு


Notice: Undefined index: tie_hide_meta in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/includes/post-meta.php on line 3

163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியலை அந்தந்த கல்லூரிகள் தங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு, கிட்டதட்ட 4 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் கட்டணம் செலுத்தி, முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். அந்தவகையில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர், இந்த 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்களாக கருதி, அவர்களுக்கான இறுதி தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில்வெளியிடப்பட்டது.இந்த மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் கலந்தாய்வு நடப்பதால், கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள், அவர்களுடன் வருபவர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வருவதோடு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளனர்.


Notice: Undefined index: tie_hide_share in /home/bxejehl1z6gd/public_html/wp-content/themes/jarida16062022/single.php on line 65