Home » குமரி செய்திகள் » அரசுபஸ் ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை
03

அரசுபஸ் ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை

அரசுபஸ் நடத்துனர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவட்டார் அடுத்துள்ள புலிப் பனம் மாடப்பன் விளை பகுதியை சேந்தவர் பால் செபஸ்டீயன் 51. இவர் திருவட்டார் பஸ் போக்குவரத்து.

டிப்போவில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனநோய் காரணமாக பல மாதங்களாக மருத்துவம் பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் விஷம் அருந்திய நிலையில் காணப்பட்டதாக தெரிகிறது. அவரை உறவினார்கள் மீட்டு சாமியார்மடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிட்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவர் மனைவி செலின் மேரி திருவட்டார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைபற்றி உடல் கூறு பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.