Home » சினிமா செய்திகள் » அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்?

அரசியல்வாதியாக நடிக்கும் தனுஷ்?

தனுஷ் தற்போது பிரபு சாலமன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு, துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகவிருக்கும் இதில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

அண்ணன், தம்பியாக நடிக்கும் தனுஷ், இதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அண்ணன் அரசியல்வாதியாகவும், தம்பி எதைப்பற்றியும் கவலைப்படாத லோக்கல் ரவுடியாகவும் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதில் தம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக ஷாமிலி ஒப்பந்தமாகியுள்ளார். அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனை அணுகியுள்ளனர். ஆனால், அவர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.

இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்க முடிவு செய்துள்ளார். டிசம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு முடித்துவிடவும் முடிவு செய்துள்ளனர். இதுதவிர, வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ்.