சற்று முன்
Home » சினிமா செய்திகள் » “அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்
I-plan-to-come-to-politics-Kajal-Agarwal-Description

“அரசியலுக்கு வர திட்டமா?” காஜல் அகர்வால் விளக்கம்

உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

“உடற்பயிற்சி செய்யாமல் என்னால் இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். அதன்பிறகு உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்படும். 3 நாட்கள் யோகா செய்வேன். தொடர்ச்சியாக 150 தடவை சூரிய நமஸ்காரம் செய்வேன். நீச்சல் பயிற்சியும் விரும்பி செய்வேன்.

உணவு விஷயத்தில் காலை சிற்றுண்டியாக ஓட்ஸ், பிரட், மதிய உணவுக்கு சாதம், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவேன். இரவு சாப்பாட்டிலும் காய்கறிகள் இருக்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கலாமே என்று கேட்கிறார்கள்.

எனது சக நடிகைகள் அப்படி நடிக்கிறார்கள் என்பதற்காக நான் நடிக்க மாட்டேன். நடிப்பில் மற்ற நடிகைகளுடன் என்னை ஒப்பிட்டு பேசுவது பிடிக்காது. எனக்கு வரும் பட வாய்ப்புகளில் எது சிறந்த கதை என்று தோன்றுகிறதோ அதை தேர்வு செய்வேன்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு வரும் எண்ணமும் இல்லை. இப்போது எனது கவனம் முழுவதும் சினிமாவில்தான் உள்ளது. சினிமா தொழில் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலம் பற்றி இப்போது யோசிக்கவில்லை.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.