Home » வர்த்தகம் செய்திகள் » அமேசான், பிள்ப்கார்ட் நிறுவனங்கள் இதையெல்லாம் இனி விற்க முடியாது- மத்திய அரசு அதிரடி உத்தரவு
online-shopping-e-commerce

அமேசான், பிள்ப்கார்ட் நிறுவனங்கள் இதையெல்லாம் இனி விற்க முடியாது- மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஒரு உற்பத்தியாளரின் மொத்த யூனிட்களையும் பெற்று அதை தங்களின் தளத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு.

ஆன்லைன் வணிகத்தில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களான அமேசானுக்கும் பிள்ப்கார்ட் நிறுவனத்திற்கும் புதிய கட்டுப்பாஅடுகளை வரும் 2019 பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஒரு உற்பத்தியாளரின் மொத்த யூனிட்களையும் பெற்று அதை தங்களின் தளத்தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு.

மேலும் இந்த நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் விற்பதை விட விலை குறைவாக விற்க்கும்

உள்நாட்டு வர்த்தகர்களின் விற்பனையை பாதுகாக்கும் வகையில் தற்போது புதிய விதிகள் போடப்பட்டுள்ளன. பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் ‘எக்ஸ்க்ளுசிவ்’ என்ற சொல்லி முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு வைத்து ஒரு பொருளை தங்கள் இணையதளம் மூலம் பிரத்யேகமாக விற்பது தடுக்கப்படுகிறது.

குறிப்பிட்ட விற்பனைப்பொருளை நாங்கள் மட்டுமே விற்கிறோம் என்று கூறி அதிகவிலையில் விற்கககூடாது.

கேஷ்பேக் ஆஃபரில் முறையாக குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதற்கான நடைமுறையை பாகுபாடின்றி வழங்க வேண்டும்.

அதேபோல் எந்த வொரு நிறுவனமும் தங்களது பொருட்களை 25 விழுக்காட்டிற்கு மேல் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக விற்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமேசான், பிள்ப்கார்ட் நிறுவனம் கொடுக்கும் அதிரடி தள்ளுபடியினால் உள்நாட்டு வர்த்தகர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இதைத் தடுக்க இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.