Home » கன்னியாகுமரி செய்திகள் » அமிர்தா கல்லூரியில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா

அமிர்தா கல்லூரியில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா

15 ஆகஸ்ட் 2022 நாகர்கோவில் இறச்சக்குளத்தில் இயங்கி வரும் அமிர்தா கல்வி நிறுவனத்தில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் முனைவர் டி.கண்ணன், மற்றும் நிர்வாக மேலாளர் வி. பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஓருங்கினைப்பாளா் முனைவர் A..குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து அமிர்தா கல்வியியல் கல்லூரியின் முதல்வர்
முனைவர் எம்.கிருஷ்ணகுமார் அவர்கள் மூவர்ண கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.வி. மகேஷ் குமார் அவர்கள் சுதந்திர தின விழா உறுதிமொழி வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அமிர்தா
தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு.ஆர். லெட்சுமணன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள் இவ்விழாவில் அனைத்து பேராசிரியர்களும், மாணவ – மாணவிகளும் கலந்து கொண்டு 75 வது சுதந்திர தினவிழாவின் சிறப்பினை பறைசாற்றினார்கள். இவ்விழாவானது நாட்டுப்பண் இசைக்க இனிதே
நிறைவுற்றது.