பாதிக்கப்பட்டவர்கள்

12,077

சிகிட்சையில்

763

குணமடைந்தவர்கள்

11,098

இறப்பு

216

புதிய எண்ணிக்கை

117

Home » இந்தியா செய்திகள் » அமித்ஷா நலம்பெற குஜராத் மக்கள் பிரார்த்தனை முதல்-மந்திரி விஜய் ரூபானி தகவல்
nat4

அமித்ஷா நலம்பெற குஜராத் மக்கள் பிரார்த்தனை முதல்-மந்திரி விஜய் ரூபானி தகவல்

ஆமதாபாத்,

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளான மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விரைவில் நலம் பெற குஜராத் மக்கள் பிரார்த்திப்பதாக அந்த மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி தெரிவித்தார்.

அமித்ஷாவின் சொந்த மாநிலம், குஜராத் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் அமித்ஷா விரைவில் நலம்பெற டுவிட்டரில் வாழ்த்தி உள்ளனர்.

அந்த வகையில் துணை முதல்-மந்திரி நிதின் படேல் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மரியாதைக்குரிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் விரைவில் குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.