Templates by BIGtheme NET
Home » வர்த்தகம் செய்திகள் » அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்தப்போவதாக Hero நிறுவனம் அறிவிப்பு!
hero-motorcycles-price-hike-3rd-time-2018

அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்தப்போவதாக Hero நிறுவனம் அறிவிப்பு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் Hero MotoCorp, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தனது அனைத்து மாடல் பைக்குகளின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமானது 37,625 ரூபாய் விலையிலான Dawn HF பைக் முதல், 1.10 லட்ச ரூபாய் விலை கொண்ட karizma ZMR மோட்டார்சைக்கிள் வரை 21 மாடல்களில் இருசக்கர வாகனங்களை இந்திய லைன் அப்பில் வைத்துள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் என ஹீரோ மோடோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ஆகியவை இந்த விலை உயர்வு நடவடிக்கைக்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் இருமுறை அந்நிறுவனம் விலையேற்றம் செய்த நிலையில் தற்போது 3வது முறையாக விலை உயர்வு நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும், மாடலுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும் என்றாலும் அதிகபட்சமாக 900 ரூபாய் வரையே ஒவ்வொரு மாடலின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது என்பதால் இந்த விலை உயர்வு விற்பனை எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கணிக்கப்பட்டுள்ளது.