Templates by BIGtheme NET
kumari-express-news

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

மும்பை: அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 20.04 கோடி டாலர் அதிகரித்து 39,953 கோடி டாலராக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம். இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 55.42 கோடிடாலர் அதிகரித்திருந்தது. யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் அமெரிக்க டாலரில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதனால் இதன் வெளிமதிப்புக்கு ஏற்ப கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது. வெளிநாட்டு கரன்சி மதிப்பு 22.04 கோடி டாலர் உயர்ந்து 37,509.6 கோடி டாலராக உயர்ந்துள்ளது. தங்கம் கையிருப்பு எந்த மாற்றமும் இன்றி 2,066.6 கோடி டாலராக நீடிக்கிறது. சர்வதேச நிதியத்தில் கையிருப்பு 227.3 கோடி டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*