Templates by BIGtheme NET
Home » சற்று முன் » அந்தமான்-நிக்கோபர் தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Weather-Forecast-Center-for-Fishermen

அந்தமான்-நிக்கோபர் தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை,

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்பட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது இந்த மழை அளவு குறைந்து உள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ. மழையும், சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை அளவும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்க கடலின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், அந்தமான்-நிக்கோபர் தீவு, வங்க கடலின் மத்திய மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.