Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் கிராமிற்கு 40 உயர்வு
gold-jewellery-rate-hike-nagercoil

அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கம் கிராமிற்கு 40 உயர்வு

நாகர்கோவில், ஏப். 13: தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நகைகடைகளும் அதிக அளவு திறக்கப்பட்டு வருகிறது. சில நகைகடையில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அட்சய திருதியை நெருங்கும் வேளையில் தங்கம் விலை உயரத்தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் ஒரு கிராம் தங்கம் ரூ.2700க்கும், ரூ.2850க்கும் இடைப்பட்ட விலையில் விற்பனையானது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்
தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2890க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 120க்கு விற்றது. நேற்று கிராமிற்கு ரூ.40 விலை உயர்ந்து ரூ.2930க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் ரூ.23 ஆயிரத்து 400க்கு விற்றது.