Home » சினிமா செய்திகள் » அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி

அடுத்த அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். ‘கொலை’ படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படதின் முதல் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், ‘கொலை’ படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘பார்த்த நியாபகம்’ செப்டம்பர் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை பகிர்ந்து விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.