Home » கன்னியாகுமரி செய்திகள் » அஞ்சுகிராமம் அருகே டிரைவரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது
202204200221584814_The-old-man-was-arrested_SECVPF

அஞ்சுகிராமம் அருகே டிரைவரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது

அஞ்சுகிராமம் அருகே டிரைவரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

அஞ்சுகிராமம் அருகே மேட்டு குடியிருப்பை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 47). டிரைவரான இவர் அஞ்சுகிராமத்தில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கும், அஞ்சுகிராமம் சிதம்பரநாதன் நகரைச் சேர்ந்த வீரதாஸ் (75) என்பவருக்கும் பணம், கொடுங்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்தநிலையில் சம்பவத்தன்று அருணாசலம் அஞ்சுகிராமத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த வீரதாஸ் அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அருணாசலத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரதாஸை கைது செய்தனர்.