Home » கன்னியாகுமரி செய்திகள் » அஞ்சுகிராமம் அருகே கொலை செய்யப்பட்ட பெண் கள்ளக்காதலி புதுமாப்பிள்ளையை போலீஸ் தேடுகிறது

அஞ்சுகிராமம் அருகே கொலை செய்யப்பட்ட பெண் கள்ளக்காதலி புதுமாப்பிள்ளையை போலீஸ் தேடுகிறது

612014_nglpag10kllea

அஞ்சுகிராமம், ஜன.6-

அஞ்சுகிராமம் அருகே கொலை செய்யப்பட்ட பெண் கள்ளக்காதலி ஆவார். அவரை கொலை செய்தபுதுமாப்பிள்ளையை போலீசார் தேடிவருகிறார்கள்.

கட்டிட தொழிலாளி

ஈத்தாமொழி அருகே பொழிக்கரை மேலபுதூரைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவருடன் ராஜாக்கமங்கலம் சுனாமி காலனியைச் சேர்ந்த தனசிங்கின் மனைவி சுமித்ரா (36) கட்டிட வேலைக்கு சென்றார்.தனசிங் வெளிநாட்டில் வேலை பார்த்தார்.இதனால் சந்திரனுடன் சுமித்ராவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அவர்கள் கள்ளக்காதலர்களாகி உல்லாசம் அனுபவித்து வந்தனர்.சந்திரன் அடிக்கடி சுமித்ரா வீட்டுக்கு வந்து சென்றார்.இதை கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் கண்டித்தனர்.இதையடுத்து உல்லாசம் அனுபவிக்க வசதியாக சில மாதங்களுக்கு முன்பு ராஜாவூர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டை இருவரும் வாடகைக்கு எடுத்தனர்.வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு காலையிலேயே 2 பேரும் அந்த வீட்டுக்கு சென்றுவிடுவார்கள். பகல் முழுவதும் அந்த வாடகை வீட்டில் சந்தோசமாக இருப்பார்கள். இரவில் அவரவர் வீடு திரும்புவார்கள்.

திருமணம்

இந்த நிலையில் சந்திரனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சந்திரன் ராஜாவூரில் உள்ள வாடகை வீட்டுக்கு செல்வதை தவிர்த்தார். ஆனால் சுமித்ராவால் சந்திரனை பிரிய மனம் இல்லை .இதனால் செல்போனில் தொடர்பு கொண்டு அவ்வப்போது அங்கு வரவழைத்து இன்பம் அனுபவித்தார்.சுமித்ராவுடனான பழக்கம் சந்திரனின் மனைவிக்கு தெரிய வந்தது. இதனால் சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சுமித்ராவை இனி சந்திக்க மாட்டேன் என சந்திரன் தனது மனைவியிடம் உறுதி அளித்தார்.ஆனால் சுமித்ரா சந்திரனை விடுவதாக இல்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு செய்தார்.இதே போல் கடந்த 3-ந்தேதி சந்திரனை தொடர்பு கொண்டு உல்லாசம் அனுபவிக்க வருமாறு சுமித்ரா அழைத்தார்.மதியவேளையில் ராஜாவூரில் உள்ள வீட்டுக்கு சந்திரன் சென்றார்.அங்கு சந்திரனுக்கும் சுமித்ராவுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்ப்பட்டது.

கொலை

இனிமேல் இங்கு வரமாட்டேன் என சந்திரன் கூற, என்னுடன் தான் நீ இருக்க வேண்டும் என சுமித்ரா சொல்ல 2 பேருக்கும் இடையே மோதல் வலுத்தது.இதில் ஆத்திரமடைந்த சந்திரன் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சுமித்ராவின் தலையில் தூக்கிப் போட்டார். இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார்.நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றி அந்த பகுதி மக்கள் அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுமித்ரா பிணமாக கிடந்தார்.அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவு

கள்ளக்காதலியை கொன்று விட்டு தலைமறைவான சந்திரனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த சந்திரன் தலைமறைவாகி விட்டார்.அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் சந்திரனை தேடிவருகிறார்கள். இந்தநிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் வீட்டு அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை போலீசார் தீவிரமாகதேடிவருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சுமித்ராவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.கணவன் 2 குழந்தைகளை மறந்து செக்ஸ் மட்டுமே வாழ்க்கை என்று இருந்த சுமித்ரா இன்று கள்ளக் காதலனாலேயே பிணமாகி உள்ளார். சுமித்ரா கொலையால் ராஜாவூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.