Templates by BIGtheme NET
Home » சினிமா செய்திகள் » அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன
Ajiths-Vishwasam-movie-Shooting-spot-displays-Leaked

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் விஸ்வாசம் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்தைத் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.

அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

மதுரை, தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் நாளில், படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன. இதில் அஜித், வில்லன்களோடு சண்டையிடும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

பர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர் என அனைத்தையுமே திட்டமிட்டு வெளியிட்டு வரும் படக்குழு, இதனால் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது.