Templates by BIGtheme NET
Home » கன்னியாகுமரி செய்திகள் » அகற்றப்படாத மரங்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள்
green-trees

அகற்றப்படாத மரங்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்கள்

நாகர்கோவில், பிப்.14 : அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, நிதி நிறுவனங்களில் பணத்தை செலுத்தி மக்கள் ஏமாற கூடாது என பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பால்துரை கூறினார்.குமரி மாவட்டத்தில் நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், மீனாட்சிபுரம் பஸ் நிலையம், வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கினர். டி.எஸ்.பி. பால்துரை தலைமையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நோட்டீஸ்களை வினியோகம் செய்தனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்து விடக்கூடாது. சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்திய ரிசர்ச் வங்கி விதிமுறைகளின் படி பதிவு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை விசாரிக்க வேண்டும். போலி நிதி நிறுவனங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்பன போன்ற அறிவுரைகள் அதில் வழங்கப்பட்டு இருந்தன.

பின்னர் டி.எஸ்.பி. பால்துரை கூறியதாவது :குமரி மாவட்டத்தில் படித்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். இருப்பினும் பல்வேறு விதமான மோசடிகள் வந்துள்ளன. கடந்த 2017 ல் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் தொடர்பாக மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 5,061 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களின் மதிப்பு ரூ.370 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரத்து 820 ஆகும். ரூ.227 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல சொத்துக்களை கண்டறிந்து பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மோசடி வழக்குகளை பொறுத்தவரை க்ரைம், திருட்டு வழக்குகள் போல் வேகமாக விசாரணை நடத்த முடியாது. மோசடி வழக்குகளை பொறுத்தவரை ஆவணங்களை திரட்ட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் மோசடி நபரிடம் இருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக மோசடி வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதம் ஆகிறது. பொதுமக்கள் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போகிறார்கள். நிதி நிறுவனம் நடத்தும் நபர் பணத்தை திரும்ப செலுத்தும் அளவுக்கு தகுதியானவர் தானா? என்பதை பார்க்க வேண்டும். கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை இழந்து விட்டு பலர் தற்போது தவித்து வருகிறார்கள். எனவே தான் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.